top of page

அமர்ந்த தண்ணீர்

“கசந்த மாரா மதுரமாகும்”

அன்பான சகோதர சகோதரிகளே, 

 

“அமர்ந்த தண்ணீர்” என்ற ஊழிய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். ஆன்மிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பயணத்தில் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். ​​

 

நாம் அனைவரும் அமைதியையும், நிம்மதியையும் நாடும் இவ்வுலகில், காலை முதல் இரவு வரை எங்கும் சத்தமும், சமாதானமின்மையும் நிறைந்திருக்கிறது. ஆகவே தான் அரசன் தாவீது விவிலியத்தில் இவ்வாறு கூறுகிறார்:

 

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்” (சங்கீதம் 23: 1-2).

 

இதன் அடிப்படை அர்த்தம் என்ன? உண்மையில் உலகின் அழுத்தங்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாவிட்டாலும், கர்த்தரின் உதவியால் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பதே இதன் பொருள். கிறிஸ்துவின் அன்புடனும், அவரது ஆவியானவரின் வழிநடத்துதலினுடனும் நம் வாழ்க்கையை இன்னும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். வாழ்வின் கசப்புகள் கர்த்தரால் மதுரமாக மாறும். 

 

ஆக, சர்வவல்லமையுள்ள இறைவனுடன், நமது உள்ளுணர்வோடு நாம் இணையக்கூடிய இடம் இது. இங்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ளதாகவும், உள்ளத்திற்கு ஊக்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

 

இங்குள்ள செய்திகளை பார்த்து பயன்பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் அன்பர்கள் நண்பர்களுக்கும் அமர்ந்த தண்ணீர் வீடியோக்கள் மற்றும் இணையதள கட்டுரைகளை பகிருமாறும் கேட்டுக்கொள்கிறோம். யாம் பெறும் இன்பம் பெறட்டும் இவ்வையகம்! 

 

தொடர்பு கொள்ள விரும்புவோர், கீழ்க்காணும் படிவம் மூலம் எங்களுக்கு உங்கள் செய்திகளை அனுப்பலாம். கர்த்தர் உங்கள் விண்ணப்பங்களை நிறைவேற்றுவாராக!

கனிவுடன்,

பிரசாந்த் மனோஜ் அப்புசாமி

முதன்மை பங்களிப்பாளர் - அமர்ந்த தண்ணீர் இறைப்பணி

bottom of page